உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / இலவச மருத்துவ முகாம்; திரளான மக்கள் பங்கேற்பு

இலவச மருத்துவ முகாம்; திரளான மக்கள் பங்கேற்பு

பந்தலுார்; பந்தலுார் 'டியூஸ்' மெட்ரிக் பள்ளியில், இந்திய செஞ்சிலுவை சங்கம், இல்லம் தேடி மருத்துவம், கூடலுார் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், மகாத்மா காந்தி பொது சேவை மையம், பள்ளி நிர்வாகம் இணைந்து இலவச மருத்துவ முகாமை நடத்தின. பள்ளி முதல்வர் சுசீந்திரநாத் தலைமை வகித்தார். சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய பொதுச் செயலாளர் சிவசுப்ரமணியம், சேவா மைய தலைவர் நவ்ஷாத் முன்னிலை வகித்தனர். மின்வாரிய செயற்பொறியாளர் முத்துக்குமார், செஞ்சிலுவை சங்க மாவட்ட செயலாளர் மோரிஸ் சாந்தாகுரூஸ் முகாமினை துவக்கி வைத்து பேசினர். டாக்டர் ஜெயினப்பாத்திலா தலைமையில் மருந்தாளுனர் நவீன், செவிலியர் சுமதி, நிர்வாக உதவியாளர் லாய்ஷான் அடங்கிய குழுவினர் சிகிச்சை அளித்தனர். முகாமில், பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று பயன் அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி