மாற்று திறனாளிகளுக்கு இலவச சக்கர நாற்காலிகள்
கூடலுார்: கூடலுார் ஆரம்ப சுகாதார நிலையத்தில், ரோட்டரி கிளப் முதுமலை சார்பில், உலக போலியோ தினத்தை முன்னிட்டு, மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச சக்கர நாற்காலிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தலைவர் ராபர்ட் அலெக்சாண்டர் வரவேற்றார். ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் கவுதம், 'போலியோ நோயை தடுக்க, குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுப்பது முக்கியத்துவம்' குறித்து விளக்கினார். பெங்களூரு நந்தினி ரோட்டரி சங்கத்தின் முன்னாள் தலைவர் மஞ்சுநாதன், கூடலுார் அரசு கல்லுார் முதல்வர் செல்வராஜ் சேவை பணிகள் குறித்து பேசினர். நிகழ்ச்சி, 10 பயனாளிகளுக்கு இலவச சக்கர நாக்காலிகள் வழங்கினர். நிகழ்ச்சியில், பொருளாளர் சினு, யாசின், ஷெரிப், அரசு கல்லூரி உதவி பேராசிரியர் மகேஸ்வரன், அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளி தலைமை ஆசிரியர் சமுத்திர பாண்டியன் உள்ளிட்ட பங்கேற்றனர். செயலாளர் சுனிஷ்குரியன் நன்றி கூறினார்.