மேலும் செய்திகள்
'ஓடாத பஸ்களுக்கு வரி செலுத்த வேண்டியதில்லை'
18-Oct-2024
குன்னுார் ; குன்னுாரில் கடும் மேகமூட்டம், மழை என மாறி வரும் காலநிலையால் மலைபாதையில் வாகனங்கள் இயக்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.குன்னுாரில் கடந்த சில நாட்களாக மழை நீடிக்கும் நிலையில், அவ்வப்போது கடும் மேகமூட்டமும் நிலவுகிறது. குன்னுார்- மேட்டுப்பாளையம் மலை பாதையில், மேகமூட்டம் காரணமாக எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால், முகப்பு விளக்குகளை எரியவிட்டு வாகனங்கள் இயக்கப்படுகின்றன. அதே சமயம், வாகனங்களை 'ஓவர்டேக்' செய்யும் போது விபத்து அபாயமும் உள்ளது. எனவே, குறைந்த வேகத்திலும், முன்னெச்ரிக்கையுடன் வாகனங்கள் இயக்க போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
18-Oct-2024