மேலும் செய்திகள்
நுாலகத்தில் மாணவ உறுப்பினர்கள் சேர்ப்பு
30-Jan-2025
விஜயகாந்த் நினைவு தினம் அனுசரிப்பு
01-Jan-2025
பந்தலுார்; பந்தலுார் நுாலகத்தில், மகாத்மா காந்தி பொது சேவை மையம் மற்றும் கிளை நுாலகம் இணைந்து மகாத்மா காந்தியின், 78 வது நினைவு தினத்தை அனுசரித்தனர்.காந்தி பொது சேவை மைய தலைவர் நவ்ஷாத் தலைமை வகித்தார். சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய பொதுச் செயலாளர் சிவசுப்ரமணியம், நுாலகர் அறிவழகன் ஆகியோர் மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாறு மற்றும் போராட்ட கால நினைவுகள் குறித்து வாசகர்களுடன் பகிர்ந்து கொண்டனர். தொடர்ந்து, நுாலகர் நித்தியகல்யாணி, ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் முத்துசாமி, நுாலக பணியாளர்கள் அம்பிகா, சரஸ்வதி மற்றும் வாசகர்கள், ஓட்டுனர்கள் மகாத்மா காந்தியின் திருவுருவப்படத்திற்கு மலர் துாவி அஞ்சலி செலுத்தினர்.--
30-Jan-2025
01-Jan-2025