உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  குப்பை கழிவுகள்; பக்தர்கள் வேதனை

 குப்பை கழிவுகள்; பக்தர்கள் வேதனை

குன்னூர்: குன்னூர் ஓட்டுப்பட்டறை சாலை, கோவில் முன்பு குப்பை மூட்டைகளை வைக்கும் நகராட்சியால் பக்தர்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். நீலகிரி மாவட்டம் குன்னூர் ஓட்டு பட்டறை பகுதிகளில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் உள்ளன. இங்கு சேகரிக்கப்படும் குப்பைகள் மூட்டைகளில் ஆங்காங்கே வைத்து லாரிகளில் கொண்டு செல்லப்படுகிறது. இதில், செல்லாண்டியம்மன் கோவில் முன்புறம் குப்பை மூட்டைகள் வைக்கப்படுகிறது. இதனை காரணமாக வைத்து, இந்த பகுதியில் உள்ள சிலரும் குப்பைகளை இதே இடத்தில் வைத்து செல்கின்றனர். இந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதுடன். பக்தர்கள் கோவிலுக்கு வருவதற்கும் சிரமப்படுகின்றனர். எனவே, கோவில் உள்ளிட்ட வழிபாட்டு தலங்கள் அருகே, நகராட்சி நிர்வாகம், குப்பை மூட்டைகள் வைப்பதை தவிர்க்க வேண்டும். என, வலியுறுத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ