மேலும் செய்திகள்
பந்தலூரில் எரியாத ஹைமாக்ஸ் தெருவிளக்கு
21-Oct-2025
பந்தலூர்: பந்தலூர் பஜார் முழுவதும், குப்பை கழிவுகளை மூட்டைகளாக கட்டி வைத்துள்ளதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. பந்தலூர் பஜார் பகுதியில், தனியார் நிறுவனம் வாயிலாக குப்பைகள் சேகரிக்கப்பட்டு, ஏலமன்னா பகுதியில் உள்ள திடக்கழிவு மேலாண்மை கிடங்கிற்கு எடுத்துச் செல்லப்படுகிறது. கடந்த இரண்டு நாட்களாக பந்தலூர் பஜாரில், குப்பைகள் சேகரிக்கும் பணியில் துப்புரவு பணியாளர்கள் ஈடுபடவில்லை. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சேகரிக்கப்பட்ட குப்பைகளை, குப்பை லாரிகளில் கொட்டி புதிய பஸ் ஸ்டாண்டில் நிறுத்தி வைத்துள்ளனர். அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசி பயணிகள் பாதிக்கப்பட்டனர். மேலும், பந்தலூர் பஜார் பகுதியில் முழுவதும், குப்பை கழிவுகளை மூட்டைகளில் கட்டி பல இடங்களிலும் வைக்கப்பட்டு இருந்தது. அப்புறப்படுத்தாததால் கடும் துர்நாற்றம் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளாதது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
21-Oct-2025