உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பூங்கா சாலையில் குப்பை கழிவு; சுகாதார சீர்கேட்டால் அவதி

பூங்கா சாலையில் குப்பை கழிவு; சுகாதார சீர்கேட்டால் அவதி

ஊட்டி: தாவரவியல் பூங்கா சாலையில் சிதறி கிடக்கும் குப்பை கழிவுகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. அரசு தாவரவியல் பூங்கா சாலையில் ஏராளமான கடைகள் செயல்பட்டு வருகிறது. வியாபாரிகள் கடைகளிலிருந்து வெளியேற்றப்படும் குப்பை கழிவுகளை கடைக்கு முன்பாக வீசி எறிந்துள்ளனர். நேற்று தீபாவளி பண்டிகையை ஒட்டி சுகாதார பணிகள் மேற்கொள்ள துாய்மை பணியாளர்கள் யாரும் வரவில்லை. தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறையை அடுத்து, அரசு தாவரவியல் பூங்காவை பார்வையிட நேற்று வழக்கத்தை விட ஏராளமான சுற்றுலா பயணியர் பூங்கா சாலையில் நடந்து வந்தனர். ஆங்காங்கே குப்பை கழிவுகள் சிதறி சுகாதார சீர்கேட்டால் சுற்றுலா பயணியர் முகம் சுளித்தனர். ஊட்டி சர்வதேச சுற்றுலா தலமாக விளங்குவதால் நகரில் முக்கிய பகுதிகளில் இது போன்ற முக்கிய பண்டிகை காலங்களில் வியாபாரிகளும் கழிவுகளை கண்ட இடங்களில் கொட்டாமல் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். நகராட்சி நிர்வாகமும் துாய்மை பணியாளர்களை துாய்மை பணியில் ஈடுபடுத்த சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.என, சுற்றுலா பயணியர் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ