உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / சாலையோரம் வீசப்படும் குப்பை; ஆற்றுநீர் மாசுபடும் அபாயம்

சாலையோரம் வீசப்படும் குப்பை; ஆற்றுநீர் மாசுபடும் அபாயம்

கூடலுார்; கூடலுார் கோழிக்கோடு சாலை, இரும்புபாலம் பகுதியில் சாலையோரம் வீசப்படும் குப்பைகளால் ஆற்று நீர் மாசுபடும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.கூடலுார், இரும்புபாலம் பகுதியில் உற்பத்தியாகும் பாண்டியார் - புன்னம்புழா ஆறு, நாடு காணி வனப்பகுதி வழியாக கேரளா மாநிலம் சாலியார் ஆற்றில் சங்கமிக்கிறது.இரும்புபாலம் பகுதியில், கோழிக்கோடு சாலையை ஒட்டிய அமைந்துள்ள சிறு வனப்பகுதியை ஒட்டி மண்சரிவு ஏற்பட்ட பகுதியில், நெடுஞ்சாலை துறை சார்பில் தடுப்பு சுவர் அமைத்துள்ளனர். கேரளாவில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் சிலர், இப்பகுதியில் அமர்ந்து உணவு உண்ட பின் அதன் கழிவுகளை இங்கு வீசி செல்கின்றனர். அதேபோன்று உள்ளூர் வாசிகள் சிலர், குப்பைகள் பிளாஸ்டிக் கழிவுகளை மூட்டையாக கட்டி வந்து, இப்பகுதியில் வீசி செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.ஏற்கனவே, இப்பகுதியில், கொட்டப்பட்டு குப்பையை நகராட்சி ஊழியர்கள் அகற்றி சுத்தம் செய்தனர். எனினும், குப்பை கொட்டுவதை தடுக்க நடவடிக்கை இல்லாததால், தொடர்ந்து குப்பை கொட்டி வருகின்றனர், ஆற்று நீர் மாசுபடும் நிலை உள்ளது.மக்கள் கூறுகையில், 'அப்பகுதியில், கொட்டப்பட்ட குப்பைகளை அகற்றி, மீண்டும் குப்பை கொட்டுவதை தடுக்க, அறிவிப்பு தடுப்பு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ