கெத்தை நிலச்சரிவு; 34ம் ஆண்டு நினைவஞ்சலி
ஊட்டி : கெத்தை நிலச்சரிவில் உயிரிழந்தவர்களுக்கு, 34ம் ஆண்டு நினைவஞ்சலி அனுசரிக்கப்பட்டது. மஞ்சூர் அருகே கெத்தையில் கடந்த, 1990ம் ஆண்டு அக்., மாதம், 25ம் தேதி வரலாறு காணாத அளவில் கனமழை பெய்து நிலச்சரிவு ஏற்பட்டது. 40க்கு மேற்பட்டவர்கள் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, ஆண்டுதோறும் அக்., 25ம் தேதி கெத்தை மின்வாரிய ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அங்கு அமைக்கப்பட்ட நினைவு துாணுக்கு சென்று அஞ்சலி செலுத்துகின்றனர். இந்த துயரசம்பவம் நிகழ்ந்து, 34ம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி கெத்தையில் நடந்தது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களை சேர்ந்த பலரும் பங்கேற்று உயிரிழந்தவர்களின் நினைவாக அமைக்கப்பட்ட துாணுக்கு மாலை அணிவித்து மலர் துாவி அஞ்சலி செலுத்தினர்.