உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / முன்னாள் முதல்வர் பிறந்தநாள் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் ஏழு குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

முன்னாள் முதல்வர் பிறந்தநாள் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் ஏழு குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

ஊட்டி,; முன்னாள் முதல்வர் பழனிசாமி பிறந்தநாளை ஒட்டி, பிறந்த ஏழு பச்சிளங் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது.நீலகிரி மாவட்டம் அ.தி.மு.க., சார்பில் முன்னாள் முதல்வர் பழனிசாமியின், 71வது பிறந்தநாள் விழாவை ஒட்டி, ஊட்டி மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிப்பாடு நடந்தது. ரத்ததான முகாம் நடந்தது.தொடர்ந்து, ஊட்டி சேட் மகப்பேறு மருத்துவமனையில் மாவட்ட செயலாளர் வினோத் தலைமையில், மருத்துவ கல்லுாரி முதல்வர் கீதாஞ்சலி, டாக்டர்கள் பெட்ஷபா, சதீஷ், செவிலியர் கண்காணிப்பாளர் ராமலட்சுமி முன்னிலையில் நேற்று பிறந்த, 7 பச்சிளக் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம், 35 குழந்தைகளுக்கு மருத்துவ கிட் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில், முன்னாள் எம்.பி., அர்ஜூணன், முன்னாள் எம்.எல்.ஏ., சாந்திராமு , மாவட்ட துணை செயலாளர் கோபாலகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ