உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / திறந்த நிலையில் அரசு சுகாதார நிலைய கதவு

திறந்த நிலையில் அரசு சுகாதார நிலைய கதவு

பந்தலுார் : பந்தலுார் அருகே பிதர்காடு பகுதியில் அரசு சுகாதார நிலைய கதவு திறந்தே கிடக்கிறது.பந்தலுார் அருகே பிதர்காடு பகுதியில் சுகாதார துறையின் நலவாழ்வு மையம் செயல்பட்டு வருகிறது. பழமையான இந்த கட்டடத்தில், சுகாதார நிலையம் செயல்பட்டு வரும் சூழலில், கட்டடத்தின் ஒரு பக்க கதவு உடைந்து விழுந்துள்ளது. இதனால், கடந்த சில நாட்களாக செவிலியர்கள், திரை அமைத்து பணியாற்றி வருகின்றனர். தற்போது, தரமில்லாத வேறொரு கதவு தற்காலிகமாக பொருத்தப்பட்டு உள்ளது. இந்த கதவும் திறந்த நிலையில் இருப்பதால் இரவு நேரங்களில், சுகாதார வளாகத்தை வனவிலங்குகள் இருப்பிடங்களாக மாற்றும் நிலை உள்ளது. மேலும், சமூக விரோதிகளின் கூடாரமாக மாற வாய்ப்புள்ளது. எனவே, கட்டடத்தை பராமரித்து தரமான கதவு பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை