மேலும் செய்திகள்
திருவாடானை ஒன்றிய கூட்டம்
04-Jan-2025
கூடலுார் : கூடலுார் நில பிரச்சனைக்கு தீர்வு காண, இ.கம்யூ., வலியுறுத்தியுள்ளது.கூடலுாரில் இ.கம்யூ., ஒன்றிய கூட்டம், செயலாளர் முகமது கனி தலைமையில் நடந்தது. கூட்டத்தில், கட்சியின் செயல்பாடுகள் குறித்து விவாதித்தனர். அதில், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:கூடலுார் நில பிரச்னைக்கு மாநில அரசு உடனடியாக தீர்வு காண வேண்டும். அனைத்து வீடுகளுக்கும் மின் இணைப்பு வழங்க வேண்டும். தனியார் தோட்ட தொழிலாளர்கள் பணி நிறைவு செய்யும்போது, அவர்களுக்கு அரசு இலவச வீடு வழங்க வேண்டும். அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் டாக்டர் உள்ளிட்ட காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். கட்சியின் நுாற்றாண்டு விழாவை அடுத்த மாதம், 9ம் தேதி கூடலுாரில் நடத்துவது, உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், கட்சி நிர்வாகிகள் மகேந்திரன், உசேன், ரவி, ராஜு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
04-Jan-2025