உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / துணை வேந்தர்கள் மாநாடு; கவர்னர் ஊட்டி வந்தார்

துணை வேந்தர்கள் மாநாடு; கவர்னர் ஊட்டி வந்தார்

ஊட்டி; ஊட்டியில் நடக்கும் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாட்டில் பங்கேற்க கவர்னர் ரவி நேற்று ஊட்டி வந்தார். ஊட்டி கவர்னர் மாளிகையில் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாடு இன்றும், நாளையும் நடக்கிறது. சிறப்பு அழைப்பாளராக துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் பங்கேற்று நிகழ்ச்சியை துவக்கி வைக்கிறார். டில்லியிலிருந்து கோவை வரும் துணை ஜனாதிபதி ஹெலிகாப்டரில் இன்று காலை, 10:30 மணிக்கு ஊட்டி வருகிறார். அவரை, தமிழக கவர்னர் ரவி வரவேற்க உள்ளார். இந்நிலையில், நேற்று சென்னையிலிருந்து கோவை வந்த கவர்னர் ரவி, கோத்தகிரி வழியாக காரில் நேற்று மாலை, 5:50 மணிக்கு ஊட்டி ராஜ்பவன் வந்தார். கலெக்டர் லட்சுமி பவ்யா வரவேற்றார். எஸ்.பி., நிஷா உட்பட அதிகாரிகள் உடனிருந்தனர். ஊட்டியில் இரு நாட்கள் துணை வேந்தர்கள் மாநாடு நடப்பதால் நகரம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை