உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / குடிநீர் வினியோகத்தில் தனி நபர்களுக்கு தாராளம் - விசாரணை நடத்துமா ஊராட்சி நிர்வாகம்?

குடிநீர் வினியோகத்தில் தனி நபர்களுக்கு தாராளம் - விசாரணை நடத்துமா ஊராட்சி நிர்வாகம்?

பந்தலுார்; பந்தலுார் அருகே குறிஞ்சி நகர் பகுதியில், தனி நபர்களுக்கு தாராளமாக குடிநீர் வினியோகம் செய்யும் நிலையில், பிற மக்கள் தண்ணீர் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். சேரங்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட, குறிஞ்சி நகர் அருகே ஓடலமூலா கிராமம் உள்ளது. இங்கு கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னர் கிணறு மற்றும், 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தேக்க தொட்டி அமைக்கப்பட்டு, ஓடலமூலா மற்றும் குறிஞ்சி நகர் பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர், சேரங்கோடு ஊராட்சி மூலம், குடிநீர் தொட்டியில் இருந்து கிராமத்திற்கு குடிநீர் வினியோகம் செய்ய அமைக்கப்பட்டுள்ள குழாயில், இருந்து தனிநபர்கள் சிலருக்கு நேரடியாக குடிநீர்குழாய் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் குடிநீர் தொட்டியில் இருந்து தண்ணீர் நேரடியாக குறிப்பிட்ட நபர்களுக்கு, 24 மணி நேரமும் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனால், குறிஞ்சிநகர் மற்றும் ஓடலமூலா கிராமங்களில் மக்கள் தண்ணீர் இல்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர். முன்னாள் கவுன்சிலர் ரமேஷ் கூறுகையில், ''குடிநீர் தொட்டியில் இருந்து பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யும் குழாயில் 'கேட்வால்வு' அமைக்கப்பட்டு, குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே இந்த வால்வை திறந்து, தண்ணீர் வினியோகம் செய்யப்படும். ஆனால், ஊராட்சி நிர்வாகம் தனிநபர்கள் சிலருக்கு, 24 மணி நேரமும், தண்ணீர் செல்லும் வகையில், விதிமீறி குடிநீர் தொட்டியில் இருந்து, குழாய் அமைத்துள்ளது.இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் கொடுத்தும், எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனம் காட்டி வருகின்றனர். இதனால் குடிநீர் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ள கிராமத்து மக்கள், விரைவில் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி