அருள்மிகு ஆஞ்சநேயர் கோவிலில் ஹனுமத் ஜெயந்தி மஹோற்சவ விழா
ஊட்டி; ஊட்டி ஆஞ்சநேயர் கோவிலில், ஸ்ரீ ஹனுமத் ஜெயந்தி மஹோற்சவ திருவிழா சிறப்பாக நடந்து வருகிறது. ஊட்டியில் உள்ள அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோவிலில் ஸ்ரீ ஹனுமத் ஜெயந்தி மஹோற்ச திருவிழாவை ஒட்டி, அமாவாசை திதியும், மூலம் நட்சத்திரத்துடன் நிகழ்ச்சி துவங்கியது. இந்த நிகழ்ச்சியை ஒட்டி,9 நாட்கள் உற்சவ ஆரம்பம். மஹா சுதர்சன ஹோமம், வாழைப்பழ அலங்காரம், வெற்றிலை சாத்து அலங்காரம், விசேஷ அலங்காரம், கனி அலங்காரம், சந்தனகாப்பு அலங்காரம், வெண்ணை காப்பு அலங்காரம், உலர் பழங்கள் அலங்காரம் நடந்தது. நேற்று காலை, 9:00 மணியளவில் விசேஷ ஹோமம், பூஜை நடந்தது. 11:00 மணிக்கு அலங்கார திருமஞ்சனம் , விசேஷ அலங்கார பூஜை நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். இன்று, காலை, 6:30 மணிக்கு ஹனுமத் ஜெயந்தி, ராஜ மாருதி அலங்காரத்தை தொடர்ந்து, 3:00 மணிக்கு திருவீதி புறப்பாடு நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது.