உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு மாரத்தான்

உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு மாரத்தான்

கோத்தகிரி; கோத்தகிரியில் உடல் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாரத்தான் போட்டி நடந்தது.கோத்தகிரி காந்தி மைதானத்தில் காலை, 7:00 மணிக்கு துவங்கிய மாரத்தான் போட்டியை, ஏ.டி எஸ்.பி., சவுந்திரராஜன் கொடியசைத்து துவக்கி வைத்தார். கோத்தகிரி இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம், தேயிலை வாரிய துணை தலைவர் ராஜேஷ்சந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாரத்தான் போட்டி, ராம்சந்த், மிஷன் காம்பவுடன், பிரைரி, காம்பாய் கடை, பஸ் நிலையம் மற்றும் காமாஜர் சதுக்கம் வழியாக மீண்டும் காந்தி மைதானத்தை அடைந்தது. அதில், பங்கேற்ற, 520 பேர், உடல் ஆரோக்கியம் மற்றும் போதை பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற ரங்கராஜ், முகமது ஆசிக் மற்றும் ராமச்சந்திரன் ஆகியோருக்கு முறையே, 3,000, 2,000 மற்றும் 1,000 ரூபாய் ரொக்க பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை, ஒரசோலை இளைஞர் மன்றத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை