மேலும் செய்திகள்
திண்டிவனத்தில் பாதாள சாக்கடை பணி
20-Jan-2025
குன்னுார்; குன்னுார் நகராட்சி, 3வது வார்டுக்கு உட்பட்ட உட்லண்ட்ஸ் பகுதியில் இருந்த பழைய பள்ளி கட்டடம் இடிக்கப்பட்டு நகராட்சியின் நிதியிலிருந்து, 1.58 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நகர்ப்புற சுகாதார மையம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.இந்த பணிகள் தரமற்ற வகையில், நடப்பதாக புகார் எழுந்துள்ளது. அருகில் கழிவுநீர் கல்வாய் உடைந்து சுகாதார மையத்திற்குள் புகுந்துவிடும் நிலை உள்ளது. சுகாதார மையம் திறக்கப்பட்ட பிறகு, சுகாதாரமற்ற மையமாக மாறும் அவலம் உள்ளது. கட்டுமானத்திற்கு செல்லும் லாரிகளால், முன்புறமுள்ள கால்வாயும் பாதிப்படைந்துள்ளது.இப்பகுதி மக்கள் கூறுகையில், 'பல முறை நகராட்சியில் தெரிவித்தும் தீர்வு காணவில்லை. நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க கமிஷனர் உட்பட உயர் அதிகாரிகளுக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது,' என்றனர்.
20-Jan-2025