உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  குப்பை கொட்டுவதால் சுகாதார சீர்கேடு

 குப்பை கொட்டுவதால் சுகாதார சீர்கேடு

கோத்தகிரி: கோத்தகிரி கட்டபெட்டு பஜாரில், குடியிருப்பு அருகே கொட்டப்பட்டுள்ள குப்பைகள் அகற்றப்படாததால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. கோத்தகிரி, குன்னுார் மற்றும் ஊட்டி இடையே அமைந்துள்ள கட்டபெட்டு பஜாரில், கடைகள், வர்த்தக நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் ஏராளமான குடியிருப்புகள் நிறைந்துள்ளன. இதனால், பல்வேறு தேவைகளுக்காக வந்து செல்லும் மக்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. மேலும், சுற்றுலா பயணிகளின் வருகையும் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில், ஜெகதளா பேரூராட்சி, கக்குச்சி மற்றும் நடுஹட்டி ஊராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் குடியிருப்புகளை ஒட்டி, குப்பைகள் கொட்டப்படுகிறது. குப்பைகள் உடனுக்குடன் அகற்றப்படுவதில்லை. இதனால், துர்நாற்றம் வீசுவதுடன், கொசு தொல்லை அதிகரித்து, மக்களுக்கு நோய் பரவும் அபாயம் அதிகரித்துள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம், குப்பைகளை உடனுக்குடன் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை