குன்னுாரில் கடும் மேகமூட்டம்: வாகனங்களை இயக்க சிரமம்
குன்னுார்: குன்னுார் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில நாட்களாக, வெயில் இருந்த நிலையில், இரவில் பனியின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்நிலையில், கடந்த, 4 நாட்களாக மேகமூட்டம் நிலவி வருகிறது. அதே நேரத்தில், பனியின் தாக்கமும் உள்ளதால், கடுங்குளிரும் நீடிக்கிறது. பொங்கல் தினமான நேற்று மக்களின் நடமாட்டம் குறைந்தது. குன்னுார்- மேட்டுப்பாளையம் மலைபாதையில், மேகமூட்டம் நிலவுவதால், வாகனங்களில் முகப்பு விளக்குகள் மற்றும் மிஸ்ட்லைட் ஒளிரவிட்டு இயக்கப்படுகிறது.மித வேகத்தில் வாகனங்களை இயக்க போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர். மேகமூட்டம் இடையே தேயிலை தோட்டங்களில், செல்பி, போட்டோ எடுக்க சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.