கொட்டி தீர்த்த கன மழை குன்னுார் ஆற்றில் வெள்ளம்
குன்னுார்; குன்னுாரில் சுற்றுப்புற பகுதிகளில் கொட்டி தீர்த்த கனமழையால் ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டது.குன்னுாரில் நேற்று காலை கடும் வெயில் நிலவியது. மாலையில், ஒரு மணி நேரத்திற்கு மேல் கன மழை பெய்தது. அருவங்காடு, பாய்ஸ் கம்பெனி, வெலிங்டன், கேத்தி உட்பட சுற்றுப்புற பகுதிகளில் மழையின் தாக்கம் அதிகமாக இருந்தது.இதனால், குன்னுார் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மழையின் காரணமாக, 'குளுகுளு' காலநிலை ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குதுாகலம் அடைந்தனர்.இதேபோல, ஊட்டியில் நேற்று காலை, 12:00 மணி முதல், மாலை, 4:00 மணிவரை மழை பெய்தது. இதனால், சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்த ஓடியது. போக்குவரத்து பாதிக்கப்பட்டது.நகரில் உள்ள பாதாள சாக்கடை சாலையில் ஓடியதால் ஏற்பட்ட துர்நாற்றத்தால் மக்கள் அவதிப்பட்டனர். சுற்றுலா பயணிகள் அதிருப்தி அடைந்தனர்.