ஊட்டியில் கனமழை சுற்றுலா பயணிகள் பரிதவிப்பு
ஊட்டி, ; ஊட்டியில் இரண்டு மணி நேரம் மழை நீடித்ததால் சுற்றுலா பயணியர் பாதிக்கப்பட்டனர். ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் நேற்று, 127 வது மலர் கண்காட்சியை, மாநில முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். நிகழ்ச்சி முடியும்போது திடீரென கனமழை பெய்தது. பூங்காவில் பச்சை பசேல் என காணப்பட்ட புல் தரைகள் சேறும் , சகதியுமாக மாறியதால் பூங்கா வந்த சுற்றுலா பயணிகள் பாதிக்கப்பட்டனர். பெரும்பலானோர் விழா மேடை கூடாரத்தில் தஞ்சம் அடைந்தனர்.பொதுப்பணித்துறை அலுவலகம் எதிரே சாலையில் தண்ணீர் தேங்கியதால் சாலையில் நடந்து சென்ற சுற்றுலா பயணியர் பாதிக்கப்பட்டனர். கமர்சியல் சாலை, சேரிங்கிராஸ், நகராட்சி மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. இரண்டு மணி நேரம் மழை நீடித்ததால் நகரில் ஆங்காங்கு போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. சுற்றுலா பயணியர் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாமல் தவித்தனர்.