உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஹெத்தையம்மன் பண்டிகை தினம்; மது கடைகளுக்கு விடுமுறை வேண்டும்

ஹெத்தையம்மன் பண்டிகை தினம்; மது கடைகளுக்கு விடுமுறை வேண்டும்

ஊட்டி; 'நீலகிரியில் ஹெத்தையம்மன் பண்டிகையின் போது உள்ளூர் விடுமுறை தருவது போல டாஸ்மாக் மது கடைகளுக்கும் விடுமுறை அளிக்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்ட டாஸ்மாக் மது கடை ஊழியர் சங்கம் சி.ஐ.டி.யு. , சங்கத் தலைவர் ஆல்துரை கலெக்டரிடம் அளித்துள்ள மனு:நீலகிரி மாவட்டத்தில் வாழும் படுகர் இன மக்களின் குலதெய்வமாக கருதப்படும் ஹெத்தையம்மனுக்கு ஆண்டுதோறும் விழா நடத்தப்படுகிறது. ஹெத்தையம்மன் பண்டிகையில் மாவட்டத்தில் உள்ள பெரும்பான்மையான மக்கள் மது மற்றும் அசைவ உணவுகளை தவிர்த்து விரதம் மேற்கொண்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஹெத்தையம்மன் பண்டிகையின் போது, மாவட்ட நிர்வாகம் உள்ளூர் விடுமுறை அளித்து வருகிறது. அன்றைய தினம் நீலகிரி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகளுக்கும் விடுமுறை அளிக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !