உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஹெத்தையம்மன் திருவிழா ஊழியர்கள் துாய்மை பணி

ஹெத்தையம்மன் திருவிழா ஊழியர்கள் துாய்மை பணி

கோத்தகிரி,; கோத்தகிரி பகுதியில் நடந்து வரும் ஹெத்தையம்மன் திருவிழாவுக்காக, கன்னேரிமுக்கு பகுதியில், பேரூராட்சி ஊழியர்கள் துாய்மை பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.நீலகிரி மாவட்டத்தில், ஹெத்தையம்மன் திருவிழா, திங்கள் கிழமை தொடங்கி நடந்து வருகிறது. பேரகணி கிராமத்தில் நடைபெறும் விழாவுக்காக, கன்னேரிமுக்கு வழியாக, ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்று வருகின்றனர்.மேலும், இங்குள்ள சுத்தக்கல் பகுதியில், அம்மன் அருள்வாக்கு நிகழ்ச்சி நடக்கிறது. இதனால், நூற்றுக்கணக்கான பக்தர்கள் கூடுகின்றனர். இப்பகுதியில் குப்பைகள் அதிகம் குவிந்துள்ளது.பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி, கோத்தகிரி பேரூராட்சி நிர்வாகம் சார்பில், 20க்கும் மேற்பட்ட பணியாளர்கள் துாய்மை பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இப்பணியை, பேரூராட்சி செயல் அலுவலர் முகமது இப்ராஹிம் ஆய்வு செய்து பணியை துரிதப்படுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை