உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பசுந்தேயிலை வரத்து அதிகம்; விலை குறைவால் பாதிப்பு

பசுந்தேயிலை வரத்து அதிகம்; விலை குறைவால் பாதிப்பு

கோத்தகிரி; கோத்தகிரி பகுதியில் பசுந்தேயிலை வரத்து அதிகரித்தும், விலைக் குறைவால், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.நீலகிரி மாவட்டத்தில், நீர் ஆதாரம் உள்ள விளை நிலங்களில் மலை காய்கறி சாகுபடி செய்தாலும், தேயிலை விவசாயம் பிரதானமாக உள்ளது. மாவட்டத்தில், 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு விவசாயிகள், இரண்டு லட்சத்திற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் இத்தொழிலை நம்பியுள்ளனர்.உரம், பூச்சிக்கொல்லி மருந்து உள்ளிட்ட இடுபொருள்களின் விலையேற்றம், தோட்ட பராமரிப்பு செலவு மற்றும் கூலி உயர்வு உள்ளிட்ட செலவினங்கள் அதிகமாக உள்ளது.தற்போது, ஒரு கிலோ பசுந்தேயிலைக்கு தரத்திற்கு ஏற்ப, சராசரியாக, 18 ரூபாய் வரை விலை கிடைக்கிறது.செலவினங்களை கணக்கிட்டால், தற்போது கிடைத்துவரும் விலையை கொண்டு, குடும்பங்களை நகர்த்த முடியாத நிலை விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது.குழந்தைகளின் கல்வி, மருத்துவம் உள்ளிட்ட தேவைகளுக்கு கடன் வாங்க வேண்டிய நிலை உள்ளது.விவசாய சங்க நிர்வாகிகள் கூறுகையில்,'மத்திய, மாநில அரசுகள் கட்டுப்படியான விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, ஊட்டியில், 17ம் தேதி கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை