உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / புதர் சூழ்ந்த நெடுஞ்சாலை: வாகன போக்குவரத்தில் சிரமம்

புதர் சூழ்ந்த நெடுஞ்சாலை: வாகன போக்குவரத்தில் சிரமம்

பந்தலுார்: பந்தலுார் அருகே பாட்டவயல் சாலையில் புதர்கள் சூழ்ந்துள்ளதால், வாகன ஓட்டுனர்கள் சிரமப்படுகின்றனர். கூடலுார் மற்றும் பந்தலுார் பகுதிகளில் இருந்து, முக்கட்டி, பிதர்காடு, பாட்டவயல் வழியாக கேரள மாநிலம் வயநாடு செல்லும் சாலை அமைந்துள்ளது. இந்த சாலையில், தமிழக, கேரளா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநில வாகனங்கள் அதிக அளவில் சென்று வருகின்றன. மேலும், தமிழக, கேரளா அரசு பஸ்களும் செல்கிறது. இந்நிலையில், பிதர்காடு பகுதியில் இருந்து தமிழக எல்லையான பாட்டவயல் வரை செல்லும் சாலையின் இரு பகுதியிலும், புதர்கள் சூழ்ந்து காணப்படுகிறது.இதனால், வளைவான பகுதிகளில் வாகனங்கள் செல்லும்போது, எதிரே வரும் வாகன ஓட்டுனர்களுக்கு தெரியாத நிலையில் வாகன விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, விபத்து ஏற்படும் முன்னர், சாலையோ புதர்களை அகற்ற வேண்டியது அவசியம் ஆகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை