உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மனித - விலங்கு மோதல் பிரச்னை: எம்.பி., ராஜா என்ன செய்தார்?

மனித - விலங்கு மோதல் பிரச்னை: எம்.பி., ராஜா என்ன செய்தார்?

பந்தலுார்:கூடலுார், பந்தலுார் பகுதியில் தொடரும் மனித - வனவிலங்கு பிரச்னைக்கு, நீலகிரியில் இரண்டு முறை எம்.பி.,யாக இருந்த ராஜா தீர்வு எதுவும் காணவில்லை என, மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.நீலகிரி லோக்சபா 'சிட்டிங்' எம்.பி., ராஜா, மூன்றாவது முறையாக எம்.பி.,யாக வேண்டும் என தீவிரமாக களம் இறங்கியுள்ளார். தி.மு.க.,வில் அவருக்கு மாற்றாக வேறு எவரும் இல்லாததால், இந்த முறையும் களம் இறங்குவது உறுதி.இவருக்கு ஆதரவாக, கூடலுார் மற்றும் பந்தலுார் பகுதியை சேர்ந்த பல்வேறு நிர்வாகிகள், தலைமையிடம் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர்.ஆனால், அவர் மீண்டும் போட்டியிடுவதில் கட்சியினர் சிலருக்கு உடன்பாடில்லை. 2009ல் முதல் முறை நீலகிரி எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இரண்டு முறை எம்.பி., ஒரு முறை அமைச்சராக இருந்தும் நீலகிரிக்கு எதுவும் பெரிதாக சாதித்து விடவில்லை. கூடலுார், பந்தலுார் பகுதியில் எந்தவிதமான குறிப்பிடும்படியான, வளர்ச்சிப் பணிகள் ஏதும் செய்யவில்லை. வனவிலங்குகள் தாக்கி யாரேனும் உயிரிழந்தால், அவர்கள் குடும்பத்திற்கு பணத்தை கொடுத்து ஆறுதல் கூற மட்டும் வந்து செல்கிறார். ஆனால், மனித- விலங்கு மோதலுக்கு இவர் இதுவரை தீர்வு காண நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், உள்ளூர் மக்களும், பழங்குடியினரும் அதிருப்தி அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை