காவல் துறை சார்பில் மனிதநேய வார விழா
ஊட்டி; ஊட்டி முத்தோரை பாலாடா பழங்குடியினர் ஆராய்ச்சி மையத்தில், காவல் துறை சார்பில், மனிதநேய வார விழா நடந்தது.சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பில் நடந்த நிகழ்ச்சியில், டி.எஸ்.பி., முத்தரசு வரவேற்றார்.ஏ.டி.எஸ்.பி., மணிகண்டன் தலைமை வகித்தார். சிறப்பு உதவி ஆய்வாளர்கள் ஜான் கென்னடி, கிருஷ்ணமூர்த்தி மற்றும் நேரு ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில், மனித நேயம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. கோத்தர், தோடர் மற்றும் படுகர் உட்பட, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமுதாயத்தை சேர்ந்த பலர் பங்கேற்றனர். பழங்குடியினர் மற்றும் பள்ளி மாணவர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சி பார்வையாளர்களை கவர்ந்தது. நிகழ்ச்சிக்கு வந்த மக்கள் பாலாடா பழங்குடியினர் ஆராய்ச்சி மைய காட்சியகத்தை பார்வையிட்டனர். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின துறை தாசில்தார் ராஜசேகர் உட்பட, பலர் பங்கேற்றனர்.