உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / படுகர் தின விழாவில் அமைதிக்கு முக்கியத்துவம்

படுகர் தின விழாவில் அமைதிக்கு முக்கியத்துவம்

கோத்தகிரி; நீலகிரி மாவட்டத்தில் படுகர் சமுதாயம் மக்கள், 400க்கும் மேற்பட்ட கிராமங்களில் வாழ்ந்து வருகின்றனர்.இம்மக்கள் ஆண்டு தோறும் மே மாதம், 15 ம் தேதியை ' படுகர் தினமாக' கடைபிடித்து கொண்டாடி வருகின்றனர்.அதன்படி, கோத்தகிரி அருகே உள்ள நட்டக்கல் மைதானத்தில் நேற்று காலை படுகர் தினம் கொண்டாடப்பட்டது. 'படுகர்களின் தந்தை' என, அழைக்கப்படும், அமார் ராவ் பகதுார் ஆரி கவுடர் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.தொடர்ந்து, அமைதிக்கு முக்கியத்துவம் வழங்கும் வகையில், வெள்ளை கொடியேற்றப்பட்டது.நிகழ்ச்சிக்கு, இளம் படுகர் நல சங்க தலைவர் தியாகு தலைமை வகித்தார். கைகாரு சீமை தலைவர் நஞ்சா கவுடர், 19 ஊர் தலைவர் ராமா கவுடர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில், 'மது இல்லாத படுகர் கிராமங்களை உருவாக்குவது; சுப நிகழ்ச்சிகள் மற்றும் இறுதி சடங்குகளை எளிமையாக கொண்டாடுவது; சமுதாய மக்கள் ஒருங்கிணைந்து, மாணவர்களின் கல்விக்கு முக்கியத்துவம் வழங்குவது; கலாச்சாரம், பாரம்பரியத்தை பாதுகாப்பது; சமுதாய மக்களிடையே ஒற்றுமையை நிலைநாட்டுவது; சமுதாய இளைஞர்கள் மற்றும் பொது மக்களிடையே, கூடுமானவரை விழிப்புணர்வு ஏற்படுத்துவது,' என உறுதிமொழி எடுக்கப்பட்டது.இதே போல, ஊட்டி இளம் படுகர் நல சங்க அலுவலகம் உட்பட, பல்வேறு கிராமங்களில், படுகர் தினம் கொண்டாடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ