உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  இன்ஸ்பெக்டர் துாக்கிட்டு தற்கொலை

 இன்ஸ்பெக்டர் துாக்கிட்டு தற்கொலை

பாலக்காடு: கேரள மாநிலம், கோழிக்கோடு தொட்டில்பாலம் பகுதியைச் சேர்ந்தவர் பினு தாமஸ் 52. இவர் பாலக்காடு மாவட்டம், செர்ப்புளச்சேரி போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி ஜுவாநிட்டா. இவர்களுக்கு ஜோவிட்டா, ஜோசப் ஆகிய இரு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் மதியம் வரை வேலையில் இருந்த பினு தாமஸ், ஸ்டேஷன் அருகே உள்ள குடியிருப்புக்கு சென்றுள்ளார். வெகு நேரம் ஆகியும் திரும்பி வராமல் இருந்த அவரை தேடி, சக ஊழியர்கள் குடியிருப்புகள் சென்று பார்த்த போது, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது. தனிப்பட்ட பிரச்னை, வேலை தொடர்பான மன அழுத்தத்தால், தற்கொலை செய்து கொள்வதாக எழுதி வைத்துள்ளார். தகவல் அறிந்து மாவட்ட எஸ்.பி., அஜித் குமார் மற்றும் மண்ணார்க்காடு டி. எஸ்.பி., சந்தோஷ் குமார் ஆகியோர் விசாரணை நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை