மேலும் செய்திகள்
208 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் துவக்கம்
04-Jul-2025
குன்னுார்;''தமிழகத்தில், 112 கோடி ரூபாயில், 50 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 208 நகர்புற நல்வாழ்வு மையங்களை, முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்,'' என, அரசு கொறடா ராமச்சந்திரன் தெரிவித்தார்.குன்னுார் நகராட்சிக்கு உட்பட்ட மாடல் ஹவுஸ் நகர்புற நலவாழ்வு மையத்தை அரசு தலைமை கொறடா ராமச்சந்திரன் துவக்கி வைத்து பேசியதாவது:தமிழகத்தில், புதிய அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மருத்துவக் கருவிகள் நிறுவுதல், மக்களை தேடி மருத்துவம், 'இன்னுயிர் காப்போம்' போன்ற பல்வேறு திட்டங்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.கிராமங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் இருப்பதை போல நகர்புறங்களிலும் ஒருங்கிணைந்த மருத்துவ சேவையை வழங்க தமிழகத்தில், 112 கோடி ரூபாயில், 50 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 208 நகர்புற நல்வாழ்வு மையங்களை, காணொளி மூலமாக தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.நீலகிரியில், 'உமரி காட்டேஜில்,1.58 கோடி ரூபாய், கடநாட்டில் 1.20 கோடி ரூபாயில் ஆரம்ப சுகாதார நிலையம், மாடல் ஹவுஸ், மாக்கமூலாவில் தலா,25 லட்சம் ரூபாயில் நகர்புற நல்வாழ்வு மையம்,' என, 3.28 கோடி ரூபாயில் திறக்கப்பட்டுள்ளது.குழந்தைகள் முதல் முதியவர் வரை அனைவருக்கும். மருத்துவ சேவை அளிக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார். கூடுதல் கலெக்டர் சங்கீதா, துணை இயக்குனர் சுகாதார (பணிகள்) சோமசுந்தரம், வட்டார மருத்துவ அலுவலர் பாரதி உட்பட பலர் பங்கேற்றனர்.
04-Jul-2025