உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கோடை சீசன் நிறைவு பெற்றும் மலை ரயில் பயணத்தில் ஆர்வம்

கோடை சீசன் நிறைவு பெற்றும் மலை ரயில் பயணத்தில் ஆர்வம்

குன்னுார்; கோடை சீசன் நிறைவு பெற்றும், ஊட்டி மலை ரயிலில் பயணம் செய்ய சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.குன்னுார்- ஊட்டி இடையே நாள்தோறும் தலா நான்கு முறையும்; மேட்டுப்பாளையம்- ஊட்டி இடையே தலா ஒரு முறையும் மலை ரயில் இயக்கப்படுகிறது. கோடை சீசனுக்காக கடந்த மார்ச் 28ல் வாரந்தோறும், வெள்ளி முதல் திங்கள் வரை, 4 நாட்களுக்கு சிறப்பு ரயில் இயக்கம் துவங்கியது. 'மேட்டுப்பாளையம் - ஊட்டி; குன்னுார்- - ஊட்டி; கேத்தி -- ஊட்டி,' என, இயக்கப்பட்டு வரும் இந்த சிறப்பு மலை ரயில்கள் இயக்கம் ஜூலை, 7ல் முடிவடைகிறது. மேட்டுப்பாளையத்தில் இருந்து, ஊட்டிக்கு வரும் சிறப்பு மலை ரயிலில் கூட்டம் அதிகம் இருந்த போதும், இங்கிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் போது கூட்டம் சற்று குறைவாக உள்ளது.இந்நிலையில், நேற்று பகல், 12:35 மணிக்கு குன்னுாரில் இருந்து ஊட்டிக்கு செல்லும் மலை ரயிலில் பயணம் செய்த சுற்றுலா பயணிகள் மலை ரயிலை 'போட்டோ' எடுக்க ஆர்வம் காட்டினர்.கூட்டம் அதிகரிப்பதால், சிறப்பு மலை ரயில்கள் இயக்கம் நீட்டிப்பது தொடர்பாக, அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ