உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பயணியர் நிழற்குடை சீரமைப்பது அவசியம்

பயணியர் நிழற்குடை சீரமைப்பது அவசியம்

கோத்தகிரி,; 'கோத்தகிரி - குன்னுார்சாலையில், சேதம் அடைந்துள்ள பயணியர் நிழற்குடையை சீரமைக்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.கோத்தகிரி- குன்னுார் சாலையில், கட்டபெட்டு குன்னுார் பஸ் நிறுத்தம், பவர் ஹவுஸ் நிறுத்தம் மற்றும் ஆருவ ஒசஹட்டி பஸ் நிறுத்தங்களில், பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. இதனை மழை மற்றும் வெயில் நாட்களில் பயணிகள் அதிகளவு பயன்படுத்தி வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக, போதிய பராமரிப்பு இல்லாமல், நிழற்குடையின் மேல் புற்கள் முளைத்து, பக்கவாட்டு சுவர்கள் விரிசில் அடைந்துள்ளது. மேலும், பயணிகள் அமரக்கூடிய இருக்கைகள் சேதமடைந்துள்ளன. இதனால் பயணிகள், ஒருங்கே அமர முடியாத நிலை உள்ளது. எனவே, நிழற்குடைகளை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை