மேலும் செய்திகள்
கட்டணமின்றி வாகனங்களை நிறுத்தலாம் என அறிவிப்பு
21-Jul-2025
பந்தலுார்; நீலகிரி மாவட்டம், பந்தலுார் அருகே இரும்புபாலம் பகுதியை சேர்ந்தவர் ரென்யா,21. பழங்குடியின மாணவியான இவர், பிளஸ்-2 முடித்த பின்னர், கோவையில் உள்ள தனியார் கல்லுாரியில் பி.பார்ம் சேர்ந்தார். ஆறு மாதம் வரை கல்லுாரியில் படித்து வந்த போது, உடல் நலம் பாதிக்கப்பட்டு கல்வியை தொடர முடியாத நிலை ஏற்பட்டது. அதனையடுத்து தாளூரில் செயல்படும், நீலகிரி கலை அறிவியல் கல்லுாரியில், பி.பி.ஏ., சேர விண்ணப்பித்தார். இந்நிலையில், கோவையில் உள்ள கல்லுாரி நிர்வாகம் அவரின் கல்வி சான்றிதழை தர மறுத்துள்ளது. 'சான்றிதழ் தர வேண்டுமானால், 4 லட்சம் ரூபாய் பணத்தை செலுத்த வேண்டும்,' என, தெரிவித்துள்ளது. இதனால், படிப்பை தொடர முடியாத நிலை ஏற்பட்டது. தொடர்ந்து, பந்தலுார் அருகே கையுன்னி பகுதியில், இலவச சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் நடந்த, விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாணவியின் நிலை குறித்து, நீலகிரி ஆதிவாசிகள் நலச்சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, நீதிபதி பிரபாகரன் கல்லுாரி நிர்வாகத்திடம் இதுகுறித்து பேசியதுடன், 'எந்த கட்டணமும் வாங்காமல் உடனடியாக சான்றிதழ்களை வழங்க வேண்டும்,' என, அறிவுறுத்தி உள்ளார். தொடர்ந்து, மாணவியை நேரில் அழைத்த கல்லுாரி நிர்வாகம், அனைத்து சான்றிதழ்களையும் கட்டணம் இல்லாமல் வழங்கியது. இதனால் மகிழ்ச்சி அடைந்த மாணவி மற்றும் பெற்றோர், ஆதிவாசி நலச்சங்க நிர்வாகிகள், நேரில் நீதிபதியை சந்தித்து நன்றியை தெரிவித்து கொண்டனர்.
21-Jul-2025