ஊட்டியில் காமராஜர் பிறந்த நாள் நிகழ்ச்சி
ஊட்டி; ஊட்டியில் காமராஜர் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. ஊட்டியில் மாவட்ட மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி தலைமை அலுவலகத்தில் காமராஜர் பிறந்த நாள் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் விஸ்வநாதன் தலைமை வகித்தார். அலுவலகத்தில் உள்ள காமராஜர் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அங்கிருந்த காந்தி, காமராஜர் அஸ்தி கலசத்திற்கு சிறப்பு பூஜை செய்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட துணை தலைவர் சூஞ்சையா தலைமை வகித்தார். நகர தலைவர் முஸ்தபா முன்னிலை வகித்தார்.நகரப் பொருளாளர் லட்சுமணன், வக்கீல் ஹரிஹரன், ஜெகநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.