கார்கில் தின தெரு நாடகம்; கல்லுாரி மாணவியர் அசத்தல்
குன்னுார்; கடந்த,1999ம் ஆண்டு காஷ்மீர் மாநிலம் கார்கில் பகுதியில், பாகிஸ்தான் ராணுவம் ஊடுருவியதால் போர் மூண்டது. மே மாதம் துவங்கிய போர் ஜூலை, 26ல் முடிவுக்கு வந்தது. தொடர்ந்து, 'விஜய் திவாஸ்' என்ற பெயரில் ஆண்டுதோறும் வெற்றி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்படி, இன்று (26ம் தேதி) 26வது ஆண்டு கார்கில் தினம் கொண்டாடும் நிலையில், நேற்று குன்னுார் பிராவிடன்ஸ் மகளிர் கல்லுாரி என்.சி.சி, மாணவியரின் கார்கில் தின தெரு நாடகம் நடந்தது. அதில், என்.சி.சி., இணை அலுவலர் லெப்., சிந்தியா ஜார்ஜ் தலைமையில், சிம்ஸ்பார்க், பெட்போர்டு, பஸ் ஸ்டாண்ட் பகுதியில் நடந்த மாணவியரின் தெரு நாடகத்தில், 'பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவல், நமது ராணுவத்தினர் சுட்டு வீழ்த்தியது மற்றும் விஜய் திவாஸ் தேச பக்தி பாடலுக்கு ஏற்ப நடனம்,' ஆகியவை இடம் பெற்றன.