உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / காட்டேரி அம்மன் கோவில் திருவிழா; கரகம் எடுத்து வந்த பக்தர்கள்

காட்டேரி அம்மன் கோவில் திருவிழா; கரகம் எடுத்து வந்த பக்தர்கள்

கூடலுார்; மேல்கூடலுார், கே.கே., நகர் பால் காட்டேரி அம்மன் கோவில் திருவிழாவில், பக்தர்கள் வேல் பூட்டியும், பறவைகாவடியுடன் பங்கேற்றனர்.மேல்கூடலுார், கே.கே., நகர் பால் காட்டேரி அம்மன் கோவில் திருவிழா, 9ம் தேதி அதிகாலை, 5:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம், காலை முதல் சிறப்பு பூஜைகள் நடந்தது. மதியம், 1:40 மணிக்கு ஊட்டி சாலை சில்வர் ரோடு பகுதியில் இருந்து பறவை காவடி ஊர்வலம் துவங்கியது. ஊர்வலத்தில் பக்தர்கள் பால்குடம், கரகம் எடுத்து வேல் பூட்டியும் பறவை காவடி பூட்டியும் பங்கேற்றனர். ஊர்வலம் மேல் கூடலுார் வழியாக கோவிலை வந்தடைந்தது. இரவு, 10:00 மணிக்கு தேர் ஊர்வலம் துவங்கியது. ஊர்வலம் நடு கூடலுார் ஐயப்பன் மற்றும் விநாயகர் கோவில், மேல் கூடலுார் வழியாக சென்று நிறைவு பெற்றது. நேற்று, காலை முதல் சிறப்பு பூஜைகளும், மதியம் மாவிளக்கு பூஜையும், மாலை அம்மன் கரகம் வீதி உலா, மஞ்சள் நீராட்டு விழா நிகழ்ச்சி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை