உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கோடநாடு காட்சி முனை சுற்றுலா பயணிகள் கூட்டம்

கோடநாடு காட்சி முனை சுற்றுலா பயணிகள் கூட்டம்

கோத்தகிரி: கோத்தகிரி கோடநாடு காட்சி முனையில், சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில் கனமழை பெய்து வருகிறது. பகல் நேரத்தில், அவ்வப்போது மேகமூட்டம் இருந்தாலும், வெயிலான காலநிலை நிலவுகிறது. இதனால், சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு அதிக எண்ணிக்கையில் வந்து செல்கின்றனர். அவர்களில் பலர் கோடநாடு காட்சி முனையின் அழகை காண தவறுவது இல்லை. தற்போது, கோத்தகிரி பகுதியில் இதமான காலநிலை நிலவுவதால், குடும்பத்துடன் வரும் சுற்றுலா பயணிகள் காட்சி முனையில் குவிந்து வருகின்றனர். விடுமுறை நாட்களில், கூட்டம், இரு மடங்கு அதிகரித்து காணப்படுகிறது. தற்போது, காட்சி முனை கோபுரத்தில் இருந்து, தெங்குமரஹாடா அழகிய கிராமம், மாயாறு, மேடநாடு மற்றும் பசுமையான வனப்பகுதியின் அழகை பயணிகள் கண்டுக்களித்து ‘போட்டோ’ எடுத்து செல்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை