கூடலுார் சேவா கேந்திரம் ரத்ததான முகாம்
கூடலுார் : கூடலுாரில் நடந்த ரத்ததான முகாமில், சேவா கேந்திரம் தன்னார்வர்கள் ரத்த தானம் வழங்கினர்.கூடலுார் அரசு மருத்துவமனையில், நீலகிரி சேவா கேந்திரம் சார்பில் ரத்ததான முகாம் நடந்தது. முகாமுக்கு, மாவட்ட பொறுப்பாளர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். ஆனந்த், நளினி முன்னிலை வைத்தனர். அரசு மருத்துவமனை தலைமை டாக்டர் சுரேஷ் முகாமை துவக்கி வைத்து, ரத்ததானம் வழங்குவதில் பயன்கள் குறித்து விளக்கினர். தொடர்ந்து, சேவா கேந்திரா உறுப்பினர்கள், தன்னார்வலர்கள் ரத்த தானம் வழங்கினர். ரத்த தானம் வழங்கியவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. முகாமில், ரத்த வங்கி செவிலியர்கள் வனிதா, மஞ்சு, தன்னார்வலர்கள் ராகுல்ராமு, ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.