மேலும் செய்திகள்
இன்றைய மின் தடை
09-Jan-2025
குன்னுார்: 'குன்னுார் குமரன் நகரில், நடைபாதை, கால்வாயை மழை காலத்திற்கு முன்பு சீரமைக்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.குன்னுார் நகராட்சிக்கு உட்பட்ட, 16வது வார்டு குமரன் நகர் பகுதியில் நுாற்றுக்கணக்கான குடும்பங்கள் உள்ளன. இங்கு கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன்பு சீரமைக்கப்பட்ட நடைபாதையில் பல இடங்களிலும் சிமென்ட் தளம் சேதமடைந்துள்ளது.நடைபாதைக்கு அடியில் அமைக்கப்பட்ட மழைநீர் கால்வாயில் குப்பை மற்றும் மண் தேங்கி, பல இடங்களிலும் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், மழை காலங்களில் குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்து பாதிப்பை ஏற்படுத்துகிறது. நடைபாதை 'சிலாப்கள்' பெயர்ந்தும், குடிநீர் குழாய்கள் முறையின்றி நடைபாதையின் மேற்பகுதியில் பதிக்கப்பட்டதாலும், மக்கள் நடந்து செல்லவும் சிரமப்படுகின்றனர்.குமரன் நகர் அருகில், கடந்த ஆண்டில் பெய்த மழையின் போது ஏற்பட்ட மண்சரிவில் ஆசிரியை ஒருவர் உயிரிழந்தார். இதேபோல, இந்த பகுதிகளிலும் பாதிப்பு அபாயம் உள்ளதால், நகராட்சி அதிகாரிகளுக்கு தெரிவித்தும் தீர்வு காணப்படாமல் உள்ளது. கால்வாய் அடைப்புகளை சீர் செய்ய நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தியும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர்.மக்கள் கூறுகையில், 'இந்த பகுதிகளை நகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து, கால்வாய் அடைப்புகளை சரி செய்து, நடைபாதையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.
09-Jan-2025