மேலும் செய்திகள்
தீபாவளி அமாவாசை பூஜை: திரளான பக்தர்கள் பங்கேற்பு
22-Oct-2025
ஊட்டி: பெம்பட்டி கிருஷ்ணன் கோவிலில் நடந்த கும்பாபிஷேக நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். ஊட்டி அருகே பெம்பட்டி கிராமத்தில் பிரசித்தி பெற்ற கிருஷ்ணன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் காலை, மாலை நேரத்தில் தினசரி பூஜை மற்றும் வார பூஜைகள் சிறப்பாக நடந்து வருகிறது. கோவில் திருப்பணிகள் மேற்கொள்ள கோவில் ஸ்தாபகர் ஆரிகவுடர் தலைமையில் முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, கடந்த சில மாதங்களாக திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கோபுரங்கள் பொலிவுப்படுத்தப்பட்டது. கும்பாபிஷேகத்தை ஒட்டி, காலை, 6:00 மணிக்கு கணபதி பூஜை நடந்தது. தொடர்ந்து, 9:00 மணிக்கு கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. பஜனை நிகழ்ச்சி நடந்தது. சிறப்பு பூஜையில் கிராம மக்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். அன்னதான நிகழ்ச்சி நடந்தது. சுற்றுவட்டாரத்திலிருந்து முக்கிய பிரமுகர்கள் உட்பட திரளான மக்கள் பங்கேற்றனர்.
22-Oct-2025