காட்டு யானையை விரட்ட திண்டுக்கல் சென்ற கும்கி
கூடலுார், ;திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட, விவசாய நிலங்களில் காட்டு யானை நுழைந்து, விவசாய விளைபயிர்களை சேதப்படுத்தி, வருவதுடன், சாலைகளில் உலா வர துவங்கியுள்ளது. இதனால், விவசாயிகள், வாகன ஓட்டுனர்கள் அச்சமடைந்துள்ளனர். அதனை விரட்ட மக்கள் வலியுறுத்தினர்.இந்நிலையில், காட்டு யானையை விரட்டுவதற்காக, முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு யானைகள் முகாமிலிருந்து, கும்கி யானை கிருஷ்ணா நேற்று முன்தினம், லாரியில் ஏற்றப்பட்டு, நள்ளிரவு, 12:00 மணிக்கு கன்னிவாடி பகுதிக்கு சென்றடைந்தது. அதனுடன் வனக்காவலர், யானை பாகன் உட்பட ஐந்து பேர் சென்றுள்ளனர்.வனத்துறையினர் கூறுகையில், 'காட்டு யானை விரட்டும் பணியில் ஈடுபடுத்தப்படும் கும்கி, சில நாட்கள் அங்கு பணியில் இருக்கும்,' என்றனர்.