சேலாஸ் தர்ம சாஸ்தா கோவிலில் விளக்கு பூஜை
குன்னுார் ;குன்னுார் சேலாஸ் தர்ம சாஸ்தா கோவிலில், 53வது ஆண்டு ஐயப்ப விளக்கு பூஜை நடந்தது.குன்னுார் சேலாஸ் பகுதியில் உள்ள தர்ம சாஸ்தா கோவிலில் மண்டல பூஜை கால திருவிழாவின் ஒரு பகுதியாக ஐயப்ப விளக்கு பூஜை நடந்து வருகிறது. 53 வது ஆண்டு விழாவில், அதிகாலை கணபதி ஹோமம், சரண கோஷத்துடன் ஐயப்பன் விளக்கு பூஜை நடந்தது.இதில், கருப்பசாமி அழைப்பு, படி பூஜை, அன்னதானம் உள்ளிட்டவை நடந்தன. ஏற்பாடுகளை குருசாமி முரளி தலைமையில் தர்மசாஸ்தா குழுவினர் செய்திருந்தனர்.