டயாலிசிஸ் மையம் அமைக்க நிலம் சமம் செய்யும் பணி
கோத்தகிரி; கோத்தகிரி அரசு மருத்துவமனை, கடந்த ஆண்டு புதுப்பிக்கப்பட்டு, புதிய கட்டடங்கள் கட்டப்பட்டு, தற்போது மருத்துவமனையில், தரமான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு, டயாலிசிஸ் மையம் இல்லாததால், பாதிக்கபட்டவர்கள் ஊட்டி அல்லது கோவை மாவட்டத்திற்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால், காலவிரயம் ஏற்படுவதுடன் அதிக தொகை செலவழிக்க வேண்டிய நிலை உள்ளது. இதனை தவி ர்க்கும் பொருட்டு, கோத்தகிரி அரசு மருத்துவமனை வளாகத்தில், ஒரே நேரத்தில், நான்கு பேருக்கு டயாலிசிஸ் செய்ய, ரோட்டரி சங்கம் முடிவெடுத்து, அதற்கான பூமி பூஜையும், இரு மாதங்களுக்கு முன்பு நடந்தது. பணியை துரிதப்படுத்த ஏதுவாக, தற்போது குறிப்பிட்ட இடத்தில் இருந்த மண் குவியல் அகற்றப்பட்டு, சமன் செய்யும் பணி நடந்து வருகிறது. இப்பணி நிறைவடைந்து, மையம் திறக்கப்படும் பட்சத்தில், கோத்தகிரி சுற்று வட்டார பகுதி மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைய வாய்ப்புள்ளது.