மேலும் செய்திகள்
காய்கறி விதை, பழ செடி தொகுப்பு வினியோகம்
05-Jul-2025
கோத்தகிரி; கோத்தகிரி சுண்டட்டி கிராமத்தில், ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் திட்ட துவக்க விழா நடந்தது.மாநில முதல்வர் கடந்த, 4ம் தேதி, அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் ஊட்டச்சத்து இயக்க திட்டத்தை துவக்கி வைத்தார். அதன் ஒரு பகுதியாக, கோத்தகிரி தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை சார்பில், கோத்தகிரி சுண்டட்டி கிராமத்தில் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் பரத்குமார் முன்னிலையில திட்டம் துவக்கி வைக்கப்பட்டது.நிகழ்ச்சியில் பங்கேற்ற விவசாயிகளுக்கு, காய்கறி விதை தொகுப்பு மற்றும் பழநாற்றுகள் வழங்கப்பட்டன. ஊட்டி மண் ஆய்வுக் கூட வேளாண்மை அலுவலர் நிர்மலா, மண் வள மேலாண்மை மற்றும் மண்மாதிரி சேகரிப்பு குறித்து பேசினார்.கால்நடை மருத்துவர் ரேவதி, கால்நடை பராமரிப்பு குறித்து விளக்கம் அளித்தார். மீன்வளத்துறை மற்றும் மகளிர் மேம்பாட்டு திட்ட துறை அலுவலர்கள் பங்கேற்று, அந்தந்த துறை திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து விளக்கம் அளித்தனர்.அதில், தோட்டக்கலை துறை அலுவலர் கவின் பிரசாத், அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் பிரசாந்த் மற்றும் திரளான விவசாயிகள் பங்கேற்றனர்.
05-Jul-2025