மேலும் செய்திகள்
மழையால் மின் தடை: மக்கள் அவதி
22-Sep-2024
குன்னுார் : குன்னுாரில் நள்ளிரவில் நீடித்த கன மழையால், மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது; மின் தடை ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்பட்டனர்.நீலகிரி மாவட்டம், குன்னுார் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், நேற்று முன்தினம் நள்ளிரவு இடியுடன் கூடிய கனமழை பெய்தது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, அதிகபட்சமாக கோடநாட்டில், 80 மி.மீ; எடப்பள்ளியில், 57 மி.மீ; குன்னுார் புறநகரில், 42 மி.மீ; குன்னுாரில், 37 மி.மீ., மழையளவு பதிவானது. மழையால், வெலிங்டன் பேரக்ஸ் ராணுவ பகுதியில் நள்ளிரவில் மரம் விழுந்து, 3 மின் கம்பங்கள், சேதமடைந்தது மின் தடை ஏற்பட்டு மக்கள் தவித்தனர். பி.எஸ்.என்.எல்., துணை அலுவலக 'டவர்களுக்கான' மின் துண்டிப்பால் இணைய சேவை பாதிக்கப்பட்டது. குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டது. இப்பகுதியில் இரவில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த, புதுவையை சேர்ந்த சுற்றுலா பஸ் மரம் விழுந்த இடத்தில் சிக்கியது. நேற்று காலை மரம் வெட்டி அகற்றிய பின், சுற்றுலா பஸ் பயணிகளுடன் நேற்று காலை அங்கிருந்து சென்றது.இதே போல, லேம்ஸ்ராக், டால்பின் நோஸ் சுற்றுலா தலங்களுக்கு செல்லும் சாலையில் விழுந்த மரத்தை, தீயணைப்பு வீரர்கள் வெட்டி அகற்றினர்.
22-Sep-2024