மேலும் செய்திகள்
பஸ்சை கடந்து சென்ற யானை அச்சம் அடைந்த பயணிகள்
27-Dec-2025
குன்னுார் : குன்னுாரில் குடியிருப்பு அருகே நடை பாதையில், சிறுத்தை பூனை பலியாகி கிடந்தது.குன்னுார் சுற்றுப்புற பகுதிகளில் சிறுத்தை, கரடி காட்டெருமை, சிறுத்தை பூனை உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. அவ்வப்போது சாலையை கடக்கும் சிறுத்தை பூனைகள் வாகனங்களில் அடிபட்டு இறந்து வருகிறது.இந்நிலையில், குன்னுார் நகரின் மத்திய பகுதியான மவுண்ட் ரோட்டில் இருந்து சின்ன பள்ளிவாசல் செல்லும் நடைபாதையில், சிறுத்தை பூனை பலியாகி கிடந்தது. தகவலின் பேரில் வனத் துறையினர் அங்கு சென்று ஆய்வு செய்தனர். தொடர்ந்து அங்கிருந்து பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் சென்றனர். வனத்துறையினர் கூறுகையில், 'சிறுத்தை பூனையை யாராவது அடித்து கென்றார்களா என்பது குறித்து விசாரணை நடத்தப்படும். பிரேத பரிசோதனை விபரம் பின்னர் தெரிவிக்கப்படும்,' என்றனர்.
27-Dec-2025