பாலாஜி நகரில் சிறுத்தை; கரிமொரா ஹட்டியில் கரடி
குன்னுார்; குன்னுாரில் மீண்டும் கரடி, சிறுத்தை நடமாட்டம் காணப்படுகிறது.குன்னுார் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் சமீப காலமாக, வனத்திலிருந்து இருந்து வெளியேறும் கரடி, காட்டெருமை, சிறுத்தைகள் உணவுக்காக குடியிருப்பு பகுதிகளுக்கு வருகின்றன.அதில், அருவங்காடு பாலாஜி நகர் பகுதியில் கடந்த அக்., மாதம், 11ம் தேதி சிறுத்தை நாயை கவ்வி சென்றது. தொடர்ந்து கடந்த, 27ம் இதே பகுதிக்கு வந்து சென்றது அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.இதேபோல, உபதலை ஊராட்சி உட்பட்ட கரி மொராஹட்டி, கரோலினா பகுதிகளில் கடந்த ஆக., மாதம், வீடுகளின் கதவை உடைத்து உணவுகளை உட்கொண்டு சென்ற கரடி தற்போது மீண்டும் வந்துள்ளது. மக்கள் கூறுகையில், 'இந்த இரு பகுதிகளில் உலா வரும் சிறுத்தை, கரடியை பிடிக்க வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.