சிறுத்தை நடமாட்டம்; கண்காணிப்பு அவசியம்
குன்னுார்; குன்னுார் சேலாஸ் அருகே குடியிருப்பு பகுதிக்கு வந்த சிறுத்தை, கோழிகளை வேட்டையாடி சென்றது.குன்னுார் அருகே வனப்பகுதிகளில் இருந்து வெளியேறும் சிறுத்தைகள், உணவுக்கு குடியிருப்பு பகுதிகளுக்கு வந்து நாய், ஆடு, கோழிகளை வேட்டையாடி செல்கின்றன.இந்நிலையில், இரவு, 10:50 மணிக்கு சேலாஸ் குடியிருப்பு பகுதிக்கு வந்த சிறுத்தை, சந்திரசேகர் என்பவர் வளர்த்து வந்த, 3 கோழிகளை வேட்டையாடி சென்றது. சப்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் 'லைட் ஆன்' செய்தவுடன் சிறுத்தை ஓட்டம் பிடித்துள்ளது. தகவலின் பேரில், குன்னுார் வனச்சரகர் ரவீந்திரநாத் தலைமையில் வனத்துறையினர் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். மீண்டும் சிறுத்தை நடமாட்டம் இருந்தால் உடனடியாக தெரிவிக்கவும் அறிவுறுத்தி சென்றனர்.