மேலும் செய்திகள்
சிறுத்தை நடமாட்டம்? வேப்பூர் அருகே மக்கள் பீதி
25-Nov-2024
குன்னுார் ; குன்னுார் அட்டடி பகுதியில் இரவில் சாலையில் நடந்து வந்த சிறுத்தையால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.குன்னுார் சுற்றுப்புற பகுதிகளில் காட்டெருமை, சிறுத்தை, கரடி நடமாட்டம் அதிகரித்துள்ளது. உணவு தேடி வனப்பகுதிகளில் இருந்து வனவிலங்குகள் வெளியேறுவதால் மனித- விலங்கு மோதல் ஏற்படும் அபாயம் உள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவில் குட்டியுடன் காட்டெருமை நடந்து சென்ற சில நிமிடங்களுக்கு பிறகு, 12:05 மணியளவில் சிறுத்தை பின் தொடர்ந்து நிதானமாக நடந்து சென்றது. இந்த காட்சி அங்குள்ள 'சிசிடிவி' கேமராவில் பதிவாகி உள்ளது. இரவு நேர பணியை முடித்து செல்லும் தொழிலாளர்கள் உட்பட மக்கள் அச்சமடைந்துள்ளனர். வனத்துறையினர் கூறுகையில்,'வனம் சூழ்ந்த இப்பகுதியில் நள்ளிரவில் விலங்குகள் சாலையில் உலா வருவதால், மக்கள் முன்னெச்சரிக்கையுடன் செல்ல வேண்டும்,' என்றனர்.
25-Nov-2024