உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  மாலையில் கிராமத்தில் உலாவும் சிறுத்தை; மக்கள் வெளியில் நடமாட அச்சம்

 மாலையில் கிராமத்தில் உலாவும் சிறுத்தை; மக்கள் வெளியில் நடமாட அச்சம்

குன்னூர்: -குன்னூர் நஞ்சப்பா சத்திரம் பகுதியில் மாலை 6.30 மணிக்கு கிராமத்துக்கு வந்த சிறுத்தையால், மக்கள், மாலை நேரங்களில் வெளியே நடமாட அச்சமடைந்துள்ளனர். குன்னூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை 6:30 மணியளவில்,சாலையில் உலா வந்த சிறுத்தை, அங்குள்ள குடிநீர் தொட்டி அருகில் அமர்ந்துள்ளது. அப்போது அருகில் வீட்டிலிருந்து வெளியே வந்த ரெஜினா மேரி என்பவர் சிறுத்தையை பார்த்து அலறி அடித்து வீட்டிற்குள் சென்றுள்ளார். வனத்துறைக்கு தகவல் தெரிவித்தும் யாரும் வராத நிலையில் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இதனால் மாலை நேரங்களில் குழந்தைகளை தனியாக வெளியே அனுப்பாமல் வீட்டில் உள்ளனர். பணிக்கு சென்று வீடு திரும்புவோர் , கன்னி மாரியம்மன் கோவில் தெரு பகுதியில் இருந்து நடந்தே வரும் நிலையில், இரவு நேரங்களில் நடந்து வர முடியாமல் ஆட்டோக்களில் வருகின்றனர். எனவே, வனத்துறையினர் கண்காணித்து கூண்டு வைத்து பிடித்து வனப்பகுதிக்குள் விட வேண்டும் என பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ